AP
உலகம்

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ரஷியா ஆயத்தம்?

அமெரிக்க தூதரகம் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்... உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்.!

DIN

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ளது. ரஷிய படைகள் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூதரகம் மூடப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு தாக்குதல்கள் நிகழ்த்தப்படும்போது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தற்காத்துக்கொள்ள ஏதுவாக, அபாய ஒலி எழுப்பப்படும், அவ்வாறு சைரன் சத்தம் கேட்டால் கீவ் நகரிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களை தற்காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ராணுவ உதவியாக அமெரிக்கா வழங்கியுள்ள நவீன ஏவுகணைகளை பயன்படுத்த அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் மூலம் ரஷியாவின் உள்புறப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நிகழ்த்தியது. ரஷியா உக்ரைன் மீது ராணுவ தாக்குதல்களை ஆரம்பித்து நேற்றுடன் 1,000 நாள்கள் ஆகிவிட்டதையொட்டி உக்ரைன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக உக்ரைனிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT