வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 75 மி.மீ. கொட்டித் தீர்த்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளில் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று(நவ. 27) தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கரைதீவு நகர் அருகே பள்ளிக் குழந்தைகள் 11 பேரை ஏற்றி வந்த டிராக்டர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் 6 குழந்தைகளும், டிராக்டர் ஓட்டுநரும், உடன்சென்ற மற்றொருவரும் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் சில பகுதிகளில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு டோக்கியோவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், மாலேவிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆகியவை மோசமான வானிலையால் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேபோல, ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் கோழிக்கோட்டுக்கு திருப்பிவிடப்பட்டது. மாலேவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும், அபுதாபியிலிருந்து புறப்பட்ட எத்தியாட் ஏர்வேஸ் விமானமும் மட்டாலாவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: புயல் உருவாவதில் தாமதம்..!
கனமழை தொடர்ந்து நீடித்தால், 4 மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்(என்பிஆர்ஐ) எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: இலங்கை: வெள்ளத்தில் சிக்கிய 6 பள்ளிக் குழந்தைகள் மாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.