காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-இல் நடந்த பயங்கர தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதை இன்னும் உறுதிபடுத்தவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறந்த 3 பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அப்பகுதியில் உள்ள படைகள் தேவையான எச்சரிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருந்த நிலையில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.