Leo Correa
உலகம்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி! - ஈரான் தகவல்

இஸ்ரேல் தாக்குதலுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக பதிலடி கொடுத்ததாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

DIN

இஸ்ரேல் தாக்குதலுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக பதிலடி கொடுத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று(சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டது.

அதன்படி, ஈரானின் தெஹ்ரான் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழியாக அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. தாக்குதல் முடிந்துவிட்டதாகவும் தங்களுடைய விமானங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் தரப்பில், தெஹ்ரானில் ராணுவ விமானங்கள் மூலமாக இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக ஈரான் விமானப் படை தகவல் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான் அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இன்றைய இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் குறைந்த பாதிப்புகளே ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் தாக்குதல் தொடங்கியதால் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT