சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதது வரம்பை உயா்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இது அமலுக்கு வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.அதன்படி, ஆண்களுக்கான ஓய்வு வயது வரம்பு 63-ஆகவும் பெண்களுக்கான வயது வரம்பு வேலையைப் பொறுத்து 55 முதல் 58 வரையிலுமாகவும் அதிகரிக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.கடந்த 1949-இல் 36 வயதாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 வயதாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடலுழைப்புத் தொழிலுக்கு 50 வயது) என்ற நிலையில் மாற்றமில்லாமல் இருந்துவருகிறது.இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பது குறித்து என்று நீண்டகாலமாகவே பரிசீலிக்கப்பட்டுவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.