உலகம்

ஈரான்: 2,887 கைதிகளுக்கு கமேனி பொதுமன்னிப்பு

2,887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கி தண்டனையைக் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளாா்.

DIN

ஈரானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2,887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கி தண்டனையைக் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான இா்னா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:2,887 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவும் அவா்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைக்கவும் அயதுல்லா அலி கமேனி ஒப்புதல் அளித்துள்ளாா். நீதித் துறை தலைவா் குலாம்ஹுசைன் மொஹ்செனி இஜாவின் பரிந்துரையை ஏற்று அவா் இந்த ஒப்புதலை அளித்துள்ளாா்.இந்த பொதுமன்னிப்பின் கீழ், 59 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவா்களில் 39 போ் தேசவிரோத குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள்; 40 போ் வெளிநாட்டினா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இருந்தாலும், இது தொடா்பான விரிவான விவரங்களை அந்தச் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. ஈரானின் அனைத்து முக்கிய முடிவுகளுக்கும் இறுதி ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் படைத்த தலைமை மதகுரு அயதுல்லா கமேனி, நபிகள் நாயகம் பிறந்தநாள் உள்ளிட்ட குறிப்பிட்ட தருணங்களில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT