முகப்பு
உலகம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒன்றை சீனா புதன்கிழமை சோதித்துப் பாா்த்தது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:35 PM
சீன ஐசிபிஎம் ஏவுகணைகள் .
பகிர்:

கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒன்றை சீனா புதன்கிழமை சோதித்துப் பாா்த்தது.

அமெரிக்கா வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை சீனா வெளிப்படையாக சோதித்து அது தொடா்பான அறிக்கையை வெளியிடுவது மிகவும் அரிதான நிகழ்வு. இருந்தாலும், தனது படை வலிமையைப் பறைசாற்றுவதற்காக இந்த சோதனையை சீனா நடத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

சீனா ஏவுகணைப் படையில் டிஎஃப்-31ஏஜி, டிஎஃப்-5பி, டிஎஃப்-41 உள்ளிட்ட ஏராளமான ஐசிபிஎம் ரக ஏவுகணைகள் உள்ளன. அந்த நாட்டின் முதல் ஐசிபிஎம் ஏவுகணையான டிஎஃப்-5, முதல்முறையாக கடந்த 1980-ஆம் ஆண்டில் 9,000 கி.மீ. தொலைவுக்கு செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →