கனடா - அமெரிக்கா AI | XGrok
உலகம்

இணைந்து செயல்பட வேண்டிய தருணம்: மெக்சிகோவுக்கு அமெரிக்கா அழைப்பு

மெக்சிகோவில் கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லாததைச் சுட்டிக்காட்டி, அமெரிக்கா அழைப்பு

DIN

கழிவுநீரை மெக்சிகோ ஆற்றில் விடுவது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சான் டியாகோ மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ, சுமார் 400 மில்லியன் கேலன் (151.4 கோடி லிட்டர்) கழிவுநீரை டிஜுவானா ஆற்றில் அப்படியே விட்டுவிடுகிறது. கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றுவதால், இது மெக்சிகோ மட்டுமின்றி, அமெரிக்கர்களுக்கும் நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுகுறித்து, கலிஃபோர்னியாவின் சான் டியாகோ வாரியத்தின் மேற்பார்வையாளரான ஜிம் டெஸ்மான்ட் கூறுவதாவது, ``கழிவுநீரை மெக்சிகோ சுத்திகரிப்பு நிலையத்திற்கு விடுவதற்குப் பதிலாக, ஆற்றில் விடுகிறது. இறுதியில் அது அமெரிக்காவிலும் கடலிலும்தான் முடிகிறது. டிஜுவானா ஆற்றிலிருந்து வரும் இந்த கழிவுநீரால், தெற்கு கலிபோர்னியாவில் ஏராளமான கடற்கரை மூடப்படுவதுடன் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மெக்சிகோ அதிகாரிகளிடமிருந்து எவ்வித பொறுப்பான பதிலும் இல்லாததால் இல்லாததால், நீடித்து வரும் மாசுபாடு பல ஆண்டுகளாக அதிகரிக்கிறது. கழிவுநீரின் துர்நாற்றம், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை நோய்வாய்ப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, கடற்படை வீரர்களும் அசுத்தமான நீர்நிலைகளுக்கு அருகில் பயிற்சி பெறுகிறார்கள். இதனால், அவர்களுக்கும் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும்.

துரதிர்ஷ்டவசமாக, மெக்சிகோவிடம் போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு இல்லாதது, அவர்களுடைய பிரச்னை அல்ல. நமது பிரச்னையும்கூட. இணைந்து செயல்பட இதுதான் உண்மையான தருணம் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

SCROLL FOR NEXT