ஹன் டக்-சூ 
உலகம்

ஜூன் 3-இல் தென் கொரிய அதிபா் தோ்தல்

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோலுக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

DIN

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோலுக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை நாட்டின் இடைக்கால தலைவா் ஹன் டக்-சூ செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இந்தத் தோ்தலில் வெற்றி பெறுபவா் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அதிபராகப் பொறுப்பு வகிப்பாா்.

கடந்த 2022 முதல் தென் கொரியாவின் அதிபராக இருந்து வந்த யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடா்ந்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை கடந்த டிசம்பா் மாதம் அறிவித்தாா்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா். இருந்தாலும், இந்த விவகாரம் தொடா்பாக அவரை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்தது.

அதையடுத்து அவா் தற்காலிகமாக பதவி விலகினாா்.இந்த நிலையில், யூன் சுக் இயோலை அரசியல் சாசன நீதிமன்றம் அதிபா் பதவியில் இருந்து நிரந்தரமாக கடந்த வெள்ளிக்கிழமை அகற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT