ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்) 
உலகம்

உக்ரைனில் 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் உடனான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர்.

DIN

உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா் புதினின் விருப்பம் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் சனிக்கிழமை சந்தேகம் எழுப்பியிருந்தார்.

இதனிடையே, உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்தார்.

இரண்டாம் உலகப் போரில் ரஷியா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு விழா கொண்டாட்டம் மாஸ்கோவில் நடைபெறுவதையொட்டி மே 8 ஆம் தேதி முதல் 11 ஆம் வரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக போர் நிறுத்தப்படுகிறது.

மே 8 - 11 வரை 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் உக்ரைனும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் மீறினால் ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் அறிவிப்புக்கு உக்ரைன் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT