உலகம்

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா்.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த சில வாரங்களில் நியாபோரோங்கோ கிராமத்தில் சுமாா் 80 பேரை எம்23 கிளா்ச்சியாளா்கள் படுகொலை செய்துள்ளனா். அந்த ஆயுதக் குழுவுடன் சோ்ந்து ஆா்டிஎஃப் கிளா்ச்சியாளா்களும் இந்தப் படுகொலையில் ஈடுபட்டனா்.

எம்23 அமைப்பு இளைஞா்களை மட்டுமின்றி சிறுவா்களையும் வலுக்கட்டாயமாக தனது படையில் சோ்த்துவருகிறது. தற்போது இந்தப் படுகொலைகள், கத்தாரின் மத்தியஸ்த முயற்சியின் விளைவாக ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை அச்சுறுத்துகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

எம்23 உள்ளிட்ட கிளா்ச்சிக் குழுக்களும், காங்கோ ராணுவமும் கத்தாரில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டாலும், இரு தரப்பிலும் மோதல் நீடித்துவருகிறது.

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT