உலகம்

பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை! ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இந்தியா - பாக். இடையே சொற்போர்!

பாகிஸ்தானின் ஒரு விமானத்தைக்கூட இந்தியா சுட்டு வீழ்த்தவில்லை! -பாக். பாதுகாப்பு அமைச்சர்

இணையதளச் செய்திப் பிரிவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு பதிலடி தரும் விதத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்திருப்பதாவது: “இந்திய தரப்பிலிருந்து பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவோ அல்லது தாக்கப்படவோ இல்லவேயில்லை”.

“கடந்த 3 மாதங்களாக அப்படி எந்தவொரு கூற்றும் எதிரொலிக்கவில்லை. இச்சம்பவங்களுக்குப்பின் சர்வதேச ஊடகத்துக்கு விரிவான விளக்கமும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து உடனடியாகவே அளிக்கப்பட்டது.

இந்திய விமானப்படை தரப்பிலிருந்து கால தாமதமாக தெரிவிக்கப்பட்டிருப்பவையெல்லாம் நம்பும்படியாக இல்லை!

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய படைகளுக்கும் இழப்புகள் கடுமையாக இருந்தன. உண்மை தெரிய வேண்டுமாயின், இரு தரப்பிலிருந்தும் விமானப்படை தளவாடங்களை சுதந்திரமாக ஆய்வு செய்திட அனுமதிப்போம்”.

“பாகிஸ்தானின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மீறும் விதத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு விதிமீறலுக்கும் ‘விரைவான, உறுதியான, தக்க பதிலடி’ அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

‘Not a single Pakistani aircraft was hit,’ claims Pak Defence Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அகம் நக... நிதி அகர்வால்!

பெண்ணின் உயிரை மாய்த்த போக்குவரத்து நெரிசல்! கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

பேசாத மெளனம்... கோமதி பிரியா!

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

SCROLL FOR NEXT