FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் 71 பேர் பலி...

தீப்பிடித்த பேருந்து
பகிர்:

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஆப்கனின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் பயணிகள் பேருந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றோடொன்று மோதியதில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உயிரிழந்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.

Advertisement

Advertisement

ஈரான் அகதிகளை எற்றிக்கொண்டு காபூல் நகரை நோக்கி பேருந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

summary

At least 71 people, including 17 children, were killed in a devastating road accident in Afghanistan’s western Herat province when a passenger bus caught fire after colliding with a truck and motorcycle, officials said Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments