அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் புதன்கிழமை கொல்லப்பட்டனர். மேலும், 14 குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மினசோட்டா மாகாணம், மினீயாபொலிஸ் நகரில் உள்ள பள்ளியில் முதல் நாள் வகுப்புக்குச் செல்வதற்கு முன்னதாக, அந்த பள்ளியின் தேவாலயத்தின் மாணவர்களுக்கான சிறப்பு வழிபாட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் தேவாலயத்தில் வழிபாட்டு கூட்டத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில், 8 வயது மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் பலியாகினர். மேலும், 14 மாணவர்கள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்?
இந்த சம்பவம் குறித்து மினீயாபொலிஸ் காவல்துறை தலைவர் கூறுகையில், ”தேவாலயத்தில் வழிபாட்டு நடந்துகொண்டிருந்த போது காலை 8.30 மணியளவில் ரைபிள், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த இளைஞர், மாணவர்கள் நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தொடர்ந்து, தன்னைதானே அந்த இளைஞரும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராபின் வெஸ்ட்மேன் என்ற 20 வயது இளைஞர் என அடையாள காணப்பட்டுள்ளடது, அவர் குற்றப்பின்னணி உடையவர் அல்ல எனத் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.