அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 
உலகம்

இந்திய அரிசிக்கும் வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை! புதின் வருகை எதிரொலியா?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை செய்யப்படுவதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் உற்பத்தியாகும் அரிசி அதிகளவில் வீணடிக்கப்படுவதால், மலிவு விலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிபர் டிரம்ப் வரிவிதிக்க பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது 50 சதவிகிதம் அளவுக்கு வரிகளை விதித்தார். இதனால், துணி, கடல் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்ததால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது.

வட்டமேசை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப்.

இந்த நிலையில், வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் டாலர்களை விடுவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மலிவான வெளிநாட்டுப் பொருள்கள் அமெரிக்காவில் உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்க சந்தையில் கொட்டப்படும் (இறக்குமதி செய்யப்படும்) அரிசியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை உரத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார். இதனால், வரிகள் தொடரலாம்” என சூசகமாகத் தெரிவித்தார்.

லூசியானாவை தளமாகக் கொண்ட கென்னடி ரைஸ் மில்லின் தலைமை நிர்வாக அதிகாரி மெரில் கென்னடி கூறுகையில், “இந்தியா, தாய்லாந்து மற்றும் சீனா ஆகியவை அமெரிக்காவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன. வரி விதிப்பு சரியான விதத்தில் வேலை செய்கிறது. நாம் அதை இரட்டிப்பாக வேண்டும்” என்றார்.

வட்டமேசை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப். உடன் கென்னடி ரைஸ் மில்லின் தலைமை நிர்வாக அதிகாரி மெரில் கென்னடி.

சமீபத்தில் ரஷிய அதிபர் விளாதீமிர் புதின், அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார். அவரின் வருகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்தியா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு.

எந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால் தங்களுக்கு லாபமாக இருக்குமோ, அங்கிருந்து வாங்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாக ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் நேற்று தெரிவித்திருந்தது.

இதன் எதிரொலியாகத்தான் இந்தியா மீது தொடர்ந்து அமெரிக்கா வரிவிதிப்புகள் அதிகப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trump considers fresh tariffs on Indian rice as US farmers allege unfair dumping

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மீது கற்கள் வீச்சு: கல்லூரி மாணவா்கள் மீது வழக்கு

மெட்ரோ கட்டுமான பொருள்கள் திருட்டு: 3 போ் கைது

கூடுதல் மருத்துவ இடங்கள்: சான்றுகளை வழங்க என்எம்சி அறிவுறுத்தல்

தலைநகரை அழகானதாக மாற்ற ஐஓசியுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் வேலைநிறுத்தம் துறைமுகங்களில் பணிகள் பாதிப்பு

SCROLL FOR NEXT