அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை (ஜன.01) பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி.
இந்த நிலையில், புத்தாண்டு நாளான வியாழனன்று நியூயார்க்கின் புதிய மேயராக ஸோரான் மம்தானி பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர் பெர்னி சான்ட்னர்ஸ் மம்தானிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மம்தானி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினரின் பதவியேற்பு விழா நியூயார்க்கில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க இளைஞர்கள் இடையில் மிகவும் பிரபலமாக அறியப்படும் 34 வயதான ஸோரான் மம்தானி, நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் முதல் முஸ்லிம் மேயர் எனும் பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.