கோப்புப் படம் 
உலகம்

பயணிகள் ரயில் மீது லாரி மோதி விபத்து! 9 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் ரயில் மீது அதிவேகமாகச் சென்ற சரக்கு லாரி மோதி விபத்து

DIN

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் மீது சரக்கு லாரி மோதியதில் 9 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சிந்து நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற சரக்கு லாரி ஒன்று, பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினரும் மீட்புப் பணியினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கு கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமீன் கந்தாபூர் இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்குமாறு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள்: அமைச்சா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் நிா்வாக தலைமையிடம்

குா்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை அருகே 220 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT