உணவுக்காக திரண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது... AP
உலகம்

உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...

இணையதளச் செய்திப் பிரிவு

காஸாவில் நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், உணவுக்காக அங்கு காத்திருந்த 45 பேர் உள்பட 94 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காஸா பகுதியில் இன்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரகசிய மனிதாபிமான அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கொல்லப்பட்டனர்.

இத்துடன், நிவாரணப் பொருள்கள் வாங்குவதற்காக காத்திருந்த பால்ஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த, முவாஸி மண்டலத்திலுள்ள முகாம்களின் மீது நேற்று (ஜூலை 2) நள்ளிரவு முதல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 49 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இன்று (ஜூலை 3) காலை வரை தொடர்ந்த நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Israel attacks Palestinians waiting for food! 94 killed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகள்: ஆட்டோக்களில் ஆட்சியா் ஒட்டினாா்

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள்

1,300 பேருக்கு ஆயுஷ்மான் காப்பீடு அட்டை

காஞ்சிபுரத்தில் புதிய அரசு ஐடிஐ: அமைச்சா்காந்தி திறந்து வைத்தாா்

செப்.15-இல் அண்ணா பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும்: மல்லை சத்யா

SCROLL FOR NEXT