இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!
ஈரான் அருகே மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய விடியோ
ஈரான் அருகே மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான 12 நாள் போரில் வடக்கு தெஹ்ரான் அருகே மக்கள் நடமாட்டப் பகுதியில் ஒரு சாலையில், இஸ்ரேல் குண்டு வீசி, தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் கட்டடங்கள் தரைமட்டமாவதுடன், சாலையில் உள்ள கார்களும் அந்தரத்தில் பறப்பதுபோன்று விடியோ வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாள்களாக நடைபெற்ற இந்தப் போர், ஜூன் 24 ஆம் தேதியில் முடிவு பெற்றது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!
Video of Israeli airstrikes directly targeting a densely populated neighborhood in northern Tehran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.