தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அல் ஜஸீரா தொலைக்காட்சியில், ஹினா ரப்பானியின் நேர்காணல் வெளியானது. அதில், சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றது பயங்கரவாதி ஹஃபீஸ் அப்துர் ரௌப் என்றும், அவரை பாகிஸ்தான் அரசு பாதுகாப்பதாகவும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் பயங்கரவாதி அல்ல, சாதாரண பாகிஸ்தான் குடிமகன் என்றும், அமெரிக்கா பட்டியலிட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பது அவர் அல்ல என்றும் ஹினா ரப்பானி விளக்கம் கொடுத்தார்.
ஏற்கனவே, இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவ உடையில் ஏராளமான உயர் அதிகாரிகளும், பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கும் அப்துர் ரௌப்வும் பங்கேற்ற புகைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியான நிலையில், அவரை பயங்கரவாதி அல்ல என முன்னாள் அமைச்சர் விளக்க முயன்றார்.
நான் ஒன்றைச் சொல்கிறேன், ஆதாரப்பூர்வமாக ஒட்டுமொத்த உலகத்துக்கும் சொல்ல விரும்புகிறேன், இந்தியா சொல்லும் அந்த நபர் இவர் அல்ல, நீங்கள் சொல்ல வரும் பயங்கரவாதியும் இவர் அல், பாகிஸ்தானில் லட்சக்கணக்கான அப்துல் ரௌஃப் இருக்கிறார்கள் என்று கூறினார் ஹினா.
உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்திப் பேசிய செய்தியாளர், இந்த புகைப்படம் போலியானது என பாகிஸ்தான் ராணுவம் எங்கேயும் சொல்லவில்லையே என்றதோடு, இவர் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர், அவரது தேசிய அடையாள எண்ணும் வெளியிடப்பட்டது. அந்த எண்ணும், அமெரிக்கா பட்டியலிட்ட பயங்கரவாதியின் தேசிய அடையாள எண்ணும் ஒன்றாக உள்ளதே. அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாதிகளின் பட்டியல்படி, இந்த நபர் ஒரு பயங்கரவாதி என வாதிட்டார்.
அவரைத்தான், பாகிஸ்தான் ராணுவம் பாதுகாத்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
ஆனால், அதற்கு பதிலளித்த ஹினா, புகைப்படத்தில் இருக்கும் இந்த நபரைத்தான் பாகிஸ்தான் ராணுவம் பாதுகாக்கிறது. ஆனால், அமெரிக்காவால் பயங்கரவாதி எனக் கூறப்பட்ட நபரை பாகிஸ்தான் ராணுவம் பாதுகாக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.
அதற்கு, செய்தியாளர், இருவரது தேசிய அடையாள எண்ணும் ஒன்றுதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார். இதனால், முன்னாள் அமைச்சருக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.