பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!
பாகிஸ்தான்: பருவமழையால் பெரும் பாதிப்பு! ஜூன், ஜூலையில் 100 குழந்தைகள் பலி!
பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக்கத்தால் அதீத மழைப்பொழிவும் வெள்ளமும் ஏற்படுவது வாடிக்கை. இதனால் ஏற்படும் இயற்கை சேதங்களால் பாகிஸ்தானில் பரவலாக மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். நிகழாண்டு பருவமழை ஜூன் பிற்பகுதியில் தொடங்கிய நிலையில், சுமார் 100 குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்.டி.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக, கைபெர் பாக்டுன்க்வா மாகாணத்தில் 40 பேரும், சிந்து மாகாணத்தில் 21 பேரும், பலோசிஸ்தானில் 16 பேரும், இஸ்லாமாபாத்தில் 1 மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரப் பகுதிகளில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த உயிரிழப்புகளுக்கு வெவேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பருவமழையின் தீவிரத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சேதங்களால் வீடுகள் தரைமட்டமானதில் 118 பேரும், பெருவெள்ளத்தில் சிக்கி 30 பேரும், மின்னல் நிலச்சரிவு உள்ளிட்ட பிற காரணங்களாலும் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 182 குழந்தைகள் உள்பட 560 பேர் காயமடைந்துமுள்ளனர்.
Monsoon mayhem: Over 200 dead, 560 injured as relentless rains lash Pakistan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.