காபி லேம் 
உலகம்

அமெரிக்காவில் கைதாகி விடுதலையான டிக்டாக் பிரபலம்! நாட்டை விட்டு வெளியேறினார்!

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு விடுதலையான உலகப் புகழ்பெற்ற டிக்டாக் பிரபலம் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

DIN

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற டிக்டாக் பிரபலம், அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

செனகல் நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் காபி லேம் (எ) கபானே லேம் (வயது 25). இவர், கடந்த ஏப்.30 ஆம் தேதி, விசா உள்ளிட்ட உரிய அனுமதிகளைப் பெற்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று லாஸ் வேகாஸ் நகரத்திலுள்ள ஹேரி ரெய்ட் பன்னாட்டு விமான நிலையத்தில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவர், தனது விசாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததினால், கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காபி லேம், அமெரிக்காவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், அவர் மீது நாடு கடத்தும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், விடுவிக்கப்பட்டு, அந்நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் மிகப் பெரியளவிலான மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் காபி லேம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

2020-ம் ஆண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவர் வெளியிட்ட டிக்டாக் விடியோக்கள் மூலம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானார் காபி லேம். இவரது, டிக்டாக் கணக்கில் மட்டும் சுமார் 16 கோடி பேர் இவரைப் பின் தொடர்கிறார்கள்.

இத்துடன், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற காபி லேம், மே மாதம் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரம்ப் குறித்து அப்படி பேசியதற்கு வருந்துகிறேன்: எலான் மஸ்க்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

மகாராஜபுரம் சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

SCROLL FOR NEXT