உலகம்

இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை

DIN

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்க நினைத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் ராணுவம் மற்றும் கடற்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமையில் (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இதையும் படிக்க: போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT