அமெரிக்க ராணுவ வீரர்கள் அணிவகுப்பு AP Photo
உலகம்

அமெரிக்க ராணுவத்தின் ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் தலைமை தளபதிக்கு அழைப்பு?

அமெரிக்க ராணுவப் படைகளின் 250-ஆவது ஆண்டு விழாவுக்கு பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

DIN

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவப் படைகளின் 250-ஆவது ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அமெரிக்கா சென்று அங்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 79-ஆவது பிறந்தநாளில் நடைபெற்ற அமெரிக்க ராணுவப் படைகளின் 250-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், இந்த செய்தியை வெள்ளை மாளிகை அதிகாரிகள் நிராகரித்தனர்.இது வெறும் புரளி என்றும் அவர்கள் கூறினர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளுக்குப்பின் நடைபெற்ற சண்டையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அந்நாட்டின் படைகளுக்கு தலைமை தாங்கினார். இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

இரவில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

SCROLL FOR NEXT