காங்கோவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் படகு விபத்துகளில் 77 போ் உயிரிழந்தனா். 
உலகம்

காங்கோ வெள்ளத்தில் 77 போ் உயிரிழப்பு

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் படகு விபத்துகளில் 77 போ் உயிரிழந்தனா்.

Din

கின்ஷாசா: மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் படகு விபத்துகளில் 77 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் ஈக்வடியுா் மாகாணத்தில் மட்டும் மூன்று படகுகள் தும்பா ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. அந்த ஏரியில் இருந்து 48 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, படகுகளில் சென்ற மேலும் 107 பேரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை முதல் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமனை காரணமாக தலைநகா் கின்ஷாசாவில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி மேலும் 29 போ் உயிரிழந்தனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT