ஈரான் மதகுரு அயத்துல்லா அலி கமேனி தொடர்ந்து உயிருடன் இருக்க முடியாது என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல் 7-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 40 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டை அழிக்க முயற்சிக்கும் ஈரான் நாடும், அந்நாட்டின் சர்வாதிகாரியான தலைமை மதகுருவு அயத்துல்லா அலி கமேனியும் தொடர்ந்து உயிருடன் இருக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார்.
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகாலை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன.
ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதையும் படிக்க: உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.