கோப்புப் படம் AP
உலகம்

இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

DIN

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் - ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, சீனா மற்றும் ரஷியா அதிபர்கள் இருவரும் தொலைபேசியில் விவாதித்தனர். சீனா, ரஷியா ஆகிய இரு நாடுகளும் ஈரானுக்கு நெருங்கிய நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரின் உரையாடலில் சீன அதிபர் ஸி ஜின்பிங் பேசுகையில், பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேற்கு ஆசியாவில் மோதலைத் தீர்க்க, முன்னுரிமையான அவசர நடவடிக்கையாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மோதல் அதிகரித்தால், மற்றைய நாடுகளும் பெரிதளவில் பாதிக்கும். ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிற விதிமுறைகளையும் இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: வெறும் கீறல் மட்டுமே! ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தில் எலான் நகைச்சுவை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பேபி ஏபிடியா? அசலான டெவால்டு பிரெவிஸாக இருக்கவே சபதம்!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.87.43 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT