ஈரானில் இருந்து நேபாள நாட்டினர் மீட்பு PTI
உலகம்

ஈரானில் இருந்து நேபாள நாட்டினர் மீட்பு: இந்தியாவுக்கு நேபாள அரசு நன்றி!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கைக்கு நேபாள அரசு நன்றி

DIN

ஈரானில் உள்ள குடிமக்களை மீட்கும் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கைக்கு நேபாள அரசு நன்றி தெரிவித்துள்ளது.

ஈரானில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து முதல் கட்டமாக 110 மாணவா்கள் மீட்கப்பட்டனா். ஈரானில் இருந்து நில எல்லை வழியாக ஆா்மீனியாவுக்கு வந்த மாணவா்கள் அந்நாட்டு தலைநகா் யெரெவானில் இருந்து கடந்த புதன்கிழமை விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனா்.

ஈரானில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசிக்கின்றனா். இதில் பாதி போ் மாணவா்கள் ஆவா். ஈரானில் மருத்துவம், தொழில் படிப்புகளை அவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்தநிலையில், தொடர்ந்து இந்தியர்களை அங்கிருந்து தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசுகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, ஈரானில் சிக்கியுள்ள அந்நாட்டு குடிமக்களையும் இந்தியா மீட்டு அழைத்து வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவுக்கு நேபாளம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஆர்ஸு ராணா தேபா கூறியிருப்பதாவது; “ஈரானிலிருந்து நேபாள நாட்டினரை வெளியேற்றும் பணிகளில் உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியாவுக்கு நன்றி. இதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

நேபாளம் - இந்தியா உறவுகளை வலிமையை பிரதிபலிக்குமொரு நடவடிக்கையாக இந்தியாவின் இந்த உதவி நடவடிக்கை அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

SCROLL FOR NEXT