சியோ தீவில் காட்டுத் தீயை அணைக்க 400-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். ஏபி
உலகம்

கிரீஸ் தீவில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! போராடும் தீயணைப்புப் படை!

சியோஸ் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க 400-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

DIN

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவில், 3-வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர்.

கிழக்கு ஏகன் தீவான சியோஸிலுள்ள, வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களின் மீது, தொடர்ந்து பரவி பல அடி உயரத்துக்கு எரியும் காட்டுத் தீயால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீவின் மத்திய நகர் பகுதியில் இந்தக் காட்டுத் தீயானது பரவியுள்ளதால், கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் அங்குள்ள ஏராளமான கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஜூன் 24) காலை நிலவரப்படி, அங்கு பரவி வரும் தீயை அணைக்க சுமார் 444 தீயணைப்புப் படை வீரர்கள், 85 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் போராடி வருகின்றனர்.

மேலும், 11 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 விமானங்கள் ஆகியவற்றின் மூலம் காட்டுத் தீயின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்துடன், இந்தக் காட்டுத் தீயானது மர்ம நபரின் செயலால் உருவாகியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், அதற்கான விசாரணையில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, கோடைக்காலத்தில் கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 100-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதலா? - ஈரான் மறுப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT