ஜான் ஹெமிங்வே... RAF
உலகம்

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணமடைந்தார்.

DIN

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் சரணடைய நிர்பந்திக்கப்பட்ட நிலையில் நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களில் கடைசி விமானியான ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். 1940 ஆம் ஆண்டு நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஜான் ஹெமிங்வேவுக்கு அப்போதய வயது 20 தான்.

இதையும் படிக்க: தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

1919 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய அயர்லாந்தின் தலைநகர் டப்ளினின் ராத்மைன்ஸ் பகுதியில் ஜான் ஹெமிங்வே பிறந்தார். பின்னர் 1938 ஆம் ஆண்டு பிரிட்டனின் ராயல் விமானப்படையில் விமானியாக சேர்ந்தார்.  

பிரான்சின் மீதான நாஜி படையெடுப்பின் போது, ​​பின்வாங்கும் பிரிட்டிஷ் படைகளுக்கு போர் விமானங்களின் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். போரின் முடிவில், ஹெம்மிங்வே வடக்கு இத்தாலியில் ஸ்பிட்ஃபயர்ஸை இயக்கிய எண். 43 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். 30 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் ஹெமிங்வே 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இங்லீஷ் கால்வாய் கடற்கரையில் பிரிட்டன் போரில் பங்கேற்ற 2,941 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஜான் பெயரும் இடம்பெற்றுள்ளது.

1940 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான நாய்ச்சண்டை எனப்படும் போரில் ஜான் சிறப்பாக பணியாற்றினார். இதனால், இவருக்கு 1941 ஆம் ஆண்டு அவரின் வீரத்துக்காக பறக்கும் சிலுவை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தெற்கு ஸ்பெயினில் கடும் வெள்ளம்! நிரம்பிய நீர்நிலைகள்...மக்கள் வெளியேற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT