2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் 1,78,000 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 16 நாடுகளில் இந்த காலரா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அவை குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தைச் சேர்ந்த கிழக்கு, தெற்கு ஆப்பிரிக்காவின் மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளதாவது,
''அனைத்துக் குழந்தைகளும் ஆரோக்கியமான எதிர்காலத்தை கொண்டிருக்க வேண்டும் என்று நம்பும் அரசாங்கம், தனியார் துறை மற்றும் ஒவ்வொரு தனிமனிதரின் அர்ப்பணிப்புகள் எங்களுக்குத் தேவை.
தெற்கு சூடான், அங்கோலா ஆகிய நாடுகள் காலராவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு சூடானில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50% பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று அங்கோலாவில் 40% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை மட்டுமே தெற்கு சூடானில் 40,000 பேருக்கு காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 694 பேர் காலராவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு இதுவாகும்.
அங்கோலாவில் ஜனவரி 7 முதல் மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் 7,500 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 294 பேர் உயிரிழந்துள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
2022-ல் ஐ.நா. தரவுகளின்படி, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் 6 கோடி குழந்தைகள் உள்பட 12 கோடி மக்கள் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்கின்றனர்.
இங்கு 17.4 கோடி மக்கள் தூய்மை, சுத்திகரிக்கட்ட குடிநீர் போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் வாழ்கின்றனர். 7 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையே உள்ளது.
இதையும் படிக்க | இசை கேட்டு வளர்ந்த கோழிக்கறி உணவு! விலை ரூ. 5,500
இதையும் படிக்க | ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.