இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு கடந்த 6-ஆம் தேதி இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.
ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் விமானம், ஏவுகணை, ட்ரோன் கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் தக்கப் பதிலடி கொடுத்து வந்தது.
இந்த நிலையில், எல்லையில் இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மே 7ஆம் தொடங்கிய போர்ப் பதற்றம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் கூறுகையில்,
உடனடியாக போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் தனது இறையாண்மை, ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல் அமைதிக்காகப் பாடுபடுகிறது. எனவே போரை இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படும். இதற்கு பாகிஸ்தான் தரப்பில் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.