ஆப்கனில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் பற்றி...
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது, இன்று காலை 8.54 மணியளவில் 140 கி.மீ. ஆழத்தில், ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது. எல்லையோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாள்களில் பதிவான நான்காவது நிலநடுக்கம் இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் 4.5 ஆகவும், சனிக்கிழமை ரிக்டர் 4.2 ஆகவும், வெள்ளிக்கிழமை ரிக்டர் 4 ஆகவும் பதிவாகியுள்ளது.
தொடர் நிலநடுக்கங்களால் ஆப்கன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.