கோப்புப் படம் 
உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்! ஒரே ரிக்டரில் தொடரும் அதிர்வுகள்?

நேபாள நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் இன்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

காஸ்கி மாவட்டத்தின் சினுவா எனும் பகுதியை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் அண்டை மாவட்டங்களான தனாஹு, பர்வாத் மற்றும் பாக்லங் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, சோலுகும்பு மாவட்டத்தில் கடந்த மே 14 ஆம் தேதியன்று இதேபோல் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியது. ஒரே மாதிரியான ரிக்டர் அளவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது, நேபாள மக்க்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் Sengottaiyan! | ADMK

தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் - சேகர் பாபு சந்திப்பு!

நவ. 29, 30, டிச. 1ல் தமிழ்நாட்டில் மழை பெய்யும்! எந்தெந்த மாவட்டங்களில்?

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

SCROLL FOR NEXT