நதி நீர் நிறுத்தம் 
உலகம்

பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம் என்று வரிந்துகட்டி வருகிறது சீனா.

DIN

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது.

இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற்றும் வேளாண்மைக்கு பாசன நீர் மற்றும் நீர்மின்சக்தியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்திருக்கும் நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முகமது அணை கட்டுமானப் பணிகளை 2025ல் திட்டமிட்டபடி நிறைவேற்றி முடிக்க சீனா தயாராகி வருகிறது.

பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரும், கடந்த திங்கள்கிழமை சீனாவுக்குச் சென்று அங்கு அமைச்சகர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த இந்தியா, சிந்து நதிநீரை நிறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுத்த உதவ முன் வந்திருக்கிறது சீனா. அதற்காகவே முகமது அணையின் கட்டுமானத்தையும் துரிதப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

SCROLL FOR NEXT