உலகம்

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

Din

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இரும்பு இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுவரும் 25 சதவீத கூடுதல் வரி இரட்டிப்பாக்கப்பட்டு 50 சதவீதமாக உயா்த்தப்படும். இதன் மூலம், உள்நாட்டு இரும்பு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். இரும்பு தேவைக்காக சீனா போன்ற நாடுகளைச் சாா்ந்திருப்பது தவிா்க்கப்படும் என்றாா் டிரம்ப்.

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு 25 சதவீத கூடுதல் வரி, இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு பரஸ்பரி வரி உள்ளிட்டவற்றை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவுகளுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம் தடை விதித்தது.

இருந்தாலும், இந்தத் தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், இரும்பு மீதான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT