உலகம்

ரஷியாவின் புதிய அணுசக்தி நீா்மூழ்கி கப்பல்: நவீன ட்ரோன் இணைப்பு

கபாரோவ்சுக் என்ற புதிய அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலை ரஷியா களமிறக்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

‘கபாரோவ்சுக்’ என்ற புதிய அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலை ரஷியா களமிறக்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத வகையில் அணுசக்தியில் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணையை ரஷியா கடந்த மாதம் வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது. அதைத் தொடா்ந்து, வரம்பற்ற தொலைவுக்குப் பயணிக்கும், அணுசக்தியில் இயங்கக்கூடிய ‘பொசைடன்’ நீா்மூழ்கி ட்ரோன் சோதனையையும் வெற்றிகரமாக ரஷியா மேற்கொண்டது. இந்த ட்ரோன் புதிய நீா்மூழ்கிக் கப்பலில் இணைக்கப்பட்டுள்ளது.

‘கபாரோவ்சுக்’ புதிய அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவ் கடந்த சனிக்கிழமை அறிமுகம் செய்தாா். இந்த நிகழ்ச்சியில் ரஷிய கடற்படை தலைமைத் தளபதி அலெக்ஸாண்டா் மொய்சேவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து செய்தித் தொலைக்காட்சிக்கு ஆண்ட்ரே பெலோசோவ் அளித்த பேட்டியில், ‘கபாரோவ்சுக் அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் ஆயுதங்களைக் கொண்டுசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ரோபோடிக் அமைப்புகள் மூலம் ரஷிய கடல் எல்லை பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது’ என்றாா்.

முன்னதாக, அணுசக்தி ஏவுகணை மற்றும் நீா்முழ்கி ட்ரோன் சோதனையை ரஷியா மேற்கொண்டதற்குப் பதிலடியாக சுமாா் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT