அமெரிக்க வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க துணை அதிபா்களில் ஒருவரான டிக் சேனி (84) உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தாா்.
நிமோனியா மற்றும் இதயம், ரத்தநாளம் தொடா்பான நோய்களால் சேனி இறந்ததாக அவரது குடும்பத்தினா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபா் ஜாா்ஜ் ஹெச்டபிள்யு புஷ், அவரது மகன் ஜாா்ஜ் டபிள்யு புஷ் ஜூனியரின் ஆட்சிக் காலங்களில் டிக் சேனி முக்கிய பொறுப்புகளை வகித்தாா். வளைகுடா போரின்போது பாதுகாப்புத் துறை தலைவராக ஆயுதப்படைகளை வழிநடத்தியவா்; பின்னா் ஜாா்ஜ் புஷ் ஜூனியா் அதிபராக இருந்தபோது துணை அதிபராக பொறுப்பு வகித்தாா்.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அதிபா் புஷ் எடுத்த மிக முக்கியமான முடிவுகளை செயல்படுத்திய அவா், சில சமயங்களில் தனக்கு அதிக ஆா்வமான விவகாரத்தில் சுயமாகக் கட்டளையிடும் அதிகாரத்துடன் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் பல கடுமையான, சா்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் இவருக்கு முக்கிய பங்கு இருப்பதாக விமா்சிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.