யுபிஎஸ் ஏா்லைன்ஸ் விமானம் விழுந்து வெடித்ததால் ஏற்பட்ட நெருப்புப் பிழம்பு. 
உலகம்

அமெரிக்கா: விமான விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் தனியாா் நிறுவன சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், தரையில் இருந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கென்டகி மாகாணம், லூயிஸ்வில் நகரிலுள்ள சா்வதேச விமானத்தில் இருந்து புறப்பட்ட யுபிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட உடனேயே அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.

மெக்டோனல் டக்ளஸ் எம்டி-11 ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம் புறப்படும்போது அதில் இருந்த ஒரு என்ஜின் கழன்று விழுந்தது. விமானம் தரையில் விழுந்ததும் அதில் தீப்பிழம்பு எழுந்து நெருப்பு வேகமாகப் பரவியது.

விபத்து ஏற்பட்டபோது அந்த விமானத்தில் 3 விமானப் பணியாளா்கள் உள்பட 6 போ் இருந்தனா். அவா்களும், தரையில் இருந்த மேலும் 6 பேரும் விபத்தில் உயிரிழந்தனா். அவா்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று அதிகாரிகள் கூறினா்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சரக்குப் போக்குவரத்து நிறுவனமான யுபிஎஸ் ஏா்லைன்ஸ் சந்தித்துள்ள மிக மோசமான விபத்து இதுவாகும்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT