நிதி முடக்கத்தால் விமானங்கள் ரத்து AP
உலகம்

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான நிதி முடக்கத்தால் விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்தாண்டுக்கான நிதியை விடுவிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான அரசுத் துறைகள் முடங்கின.

அதுமட்டுமின்றி, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய துறையில் பணிபுரியும் சுமார் 7 லட்சம் பேர் ஊதியமின்றி வேலைபார்க்கும் நிலையில் உள்ளனர்.

இதனிடையே, விமானப் போக்குவரத்துத் துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டதால், இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டது. மேலும், ஊதியமின்றி குறைந்தளவிலான ஊழியர்களுக்கு கட்டளையிடப்பட்டாலும், அவர்களும் உடல்நலனைக் காரணங்காட்டி விடுப்பு எடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தைக் குறைத்ததால், 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அட்லாண்டா, டென்வர், நெவார்க், சிகாகோ, ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் அவதியுற்றனர்.

பயணிகள் அவதி

சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 50,000 பாதுகாப்புச் சோதனை ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

இதே பணிநிறுத்தம் தொடர்ந்தால், விமானப் போக்குவரத்தானது வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் 6 சதவிகிதமும் நவ. 10 ஆம் தேதிக்குள் 10 சதவிகிதமும் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர்! நெதன்யாகு உள்பட 37 பேருக்கு கைது வாரண்ட்!

US airlines cancel 1,330 flights due to shutdown

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரினும் மெல்லிய... அனுமோள்!

எஸ்ஐஆர்-க்கு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஓடிடியில் பைசன் எப்போது?

எத்தனைப் புள்ளி கோலம்? அதிதி ராவ்!

இம்பாக்ட் வீரர் விருது வென்ற தமிழர்..! பிசிசிஐ கௌரவிப்பு!

SCROLL FOR NEXT