மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் அதிகளவில் மக்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 6 பேர் பலியாகியுள்ளனர்.
கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் உள்ள விளையாட்டுத் திடலில், இன்று (நவ. 12) ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அப்போது, ராணுவத்தில் இணைவதற்கு விண்ணப்பிக்க நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிகளவில் மக்கள் திரண்டதால் ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அப்பகுதியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தச் சம்பவத்தில், இதுவரை 6 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட முன்கூட்டியே ராணுவத்தின் ஆள்சேர்ப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் அங்கு திரண்டிருந்த மக்கள் இடையே நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கரோனா பெருந்தொற்று காலத்தில், கானாவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. இதனால், விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றால் கானா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நெதன்யாகுவுக்கு மன்னிப்பு கோரி இஸ்ரேல் அதிபருக்கு டிரம்ப் கடிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.