பறக்கும் கார்கள் Ng Han Guan
உலகம்

பறக்கும் கார்கள் உற்பத்தியைத் தொடங்கியது சீன நிறுவனம்

பறக்கும் கார்கள் உற்பத்தியை சோதனை முறையில் தொடங்கியது சீன நிறுவனம்

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த தலைமுறைக்கான வாகனமான பறக்கும் கார்கள் உற்பத்தியை சோதனை முறையில் சீன நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, விரைவில் பறக்கும் கார்களை உற்பத்தி செய்யவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக, பறக்கும் கார்கள் உற்பத்தியை சீன நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

தெற்கு சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் 1.20 ஆயிரம் சதுக மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையில் முதல் பறக்கும் கார் தயாரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக ஆண்டுக்கு 5,000 பறக்கும் கார்களை இந்த தொழிற்சாலை தயாரிக்கும் வல்லமை பெற்ற நிலையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது ஆண்டுக்கு 10 ஆயிரம் பறக்கும் கார்களைத் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படவிருக்கிறது.

இதுவரை உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிலேயே, மிகப்பெரிய அளவில் திறன் பெற்ற தொழிற்சாலையாக இது அமைந்திருப்பதாகவும், அதன் முழு செயல்திறனும் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு பறக்கும் கார் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்!

காற்றே பூங்காற்றே... ரகுல் ப்ரீத் சிங்!

தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!

கானாவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல்! 6 பேர் பலி!

குடியிருப்புக்குள் உலா வந்த காட்டு யானை! மக்கள் அச்சம்!

SCROLL FOR NEXT