சீன பாலம் 
உலகம்

சீனாவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம்! ஒரு சில வினாடிகளில் தூசு மண்டலமாக மாறியது ஏன்?

சீனாவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து ஒரு சில வினாடிகளில் தூசு மண்டலமாக மாறியது பற்றி

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய சீனாவை திபெத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய பாலம் ஒன்று, ஒரு சில வினாடிகளில் இடிந்து தரைமட்டமானது.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஹோங்கி பாலமானது, செவ்வாயன்று பகுதியாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

வெறும் பாலம் இடிந்து விழவில்லை, அதன் கடன் கணக்கான கான்கிரீட்கேள் ஆற்றில் கலந்து, அங்கிருந்த காற்று முழுவதும் பாலத்தின் மாசு கலந்து பார்க்கவே அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த விபத்துக் காட்சி.

பாலம் அமைந்திருந்த பகுதிக்கு அருகே இருந்த அணையில் அதிகப்படியான தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்த தண்ணீரின் அழுத்தமே, மலைப் பகுதியில் விரிசலை ஏற்படுத்தி, அதனால், புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

758 மீட்டர் நீள்ம் கொண்ட மேம்பாலத்தின் ஒரு பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மேம்பாலம் மூடப்பட்டிருந்த நிலையில் பெரிய அளவில் அபாயம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மிகப்பெரிய மலைப் பகுதியை ஒட்டி, இந்த பாலம் அமைக்கப்பட்டிருந்ததும், அதற்கு மிக அருகே அணைக்கட்டு இருந்த நிலையில், அணைக்கட்டின் அழுத்தம் காரணமாகவே மேம்பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்குக் காரணம், மேம்பால வடிவமைப்பில் நடந்த குளறுபடியா அல்லது கட்டுமானத்தில் நடந்த சிக்கலா என்று விசாரணை தொடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு! குற்றவாளியுடன் தொடர்புடைய சிவப்புக் காரை தேடும் தில்லி போலீஸ்

தேரே இஷ்க் மெய்ன் படத்தில் 9 பாடல்கள்?

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும்: கேசவ் மகாராஜ்

போட்டியாளர்களுடன் சேர்ந்து டாஸ்க் விளையாடிய பிக் பாஸ்!

SCROLL FOR NEXT