ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது பேருந்து மோதியதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
வால்ஹாலாவேகன் தெருவில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.23 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தில், இரண்டு அடுக்கு பேருந்து (படம்) முதலில் தூண் ஒன்றின் மீது மோதியது. பின்னா் அது பேருந்து நிறுத்தத்துக்குள் புகுந்தது.
பேருந்தில் பயணிகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை, பாலினம், வயது ஆகியவை குறித்து இதுவரை காவல்துறை எதுவும் தெரிவிக்கவில்லை. பேருந்தின் ஓட்டுநா் கைதுசெய்யப்பட்டுள்ளாா். அவா் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.