காஸா அதிகாரிகளிடம், மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அரசு ஒப்படைத்துள்ளது.
காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையிலான போரானது கடந்து அக்.10 ஆம் தேதி முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகள் இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இத்துடன், ஹமாஸ் ஒப்படைக்கும் ஒவ்வொரு இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடலுக்கு நிகராக, 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் உடல் நேற்று (நவ. 25) இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, தங்களது கட்டுப்பாட்டில் இருந்த மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அரசு ஒப்படைத்துள்ளது.
இதன்மூலம், இஸ்ரேல் ஒப்படைத்த பாலஸ்தீனர் உடல்களின் எண்ணிக்கை 345 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், அதில் 99 பாலஸ்தீனர்களின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, இஸ்ரேல் தாக்குதல்களில் காஸாவின் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால், அங்கு நிலவும் டி.என்.ஏ. பரிசோதனைக் கருவிகளின் பற்றாக்குறையால் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தாமதமாகி வருவதாக, காஸா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ! பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.