ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
தாய்போ மாவட்டத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று (நவ. 26) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கு பரவியதால், தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்நாட்டின் தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டு 128 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
இதன்மூலம், இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவரும் பலியான நிலையில் உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக, ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்துடன், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 700 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள சுமார் 2,000 வீடுகளில் 4,800-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.