இலங்கையில் உள்ள மருத்துவமனைக்குள் சூழ்ந்த வெள்ள நீர்  AP
உலகம்

டிட்வா புயல்! இலங்கையில் 123 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; 130 பேர் மாயம்!

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 130 பேர் மாயமாகியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கையில், டிட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

டிட்வா புயலினால், இலங்கை முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், டிட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளிக் காற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக, இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.

இதில், அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்ட கண்டி மாவட்டத்தில் மட்டும் 51 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 130-க்கும் அதிகமான மக்கள் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகளில் இலங்கையின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்துடன், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் 1 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,23,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டுக்கு சுமார் 27 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மேலும், அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 80 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் தடை? ரஷிய அரசு அறிவிப்பு!

The death toll from floods and landslides caused by Cyclone Ditwah in Sri Lanka has risen to 123.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா

உதகை சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை

உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரம்: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT