ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் புறப்பட்ட வேகத்தில் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
ஆஸ்திரேலியாவின் ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் சனிக்கிழமை சிறியரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்தது.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஓடுபாதையை விட்டு விமானம் கிளம்பியதும் தடுமாறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விமானம் போதுமான உயரத்தை அடையத் தவறியதால், விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் இணையதளங்களில் வைராகி வருகின்றன.
சிட்னியில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு அருகே காலை 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.