அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத் தலைநகர் ஜாக்சனுக்கு வடகிழக்கே 190 கி.மீதொலைவில் உள்ள நகரமான லேலண்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். மேலும 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!
காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேயர் ஜான் லீ பிபிசியிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சந்தேக நபர் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இருப்பினும், போலீஸ் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Advertisement
Advertisement
துப்பாக்கிச்சூடு லேலண்ட் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக அங்குள்ள பள்ளி வளாகத்தில் 'ஹோம்கமிங்' என்ற ஆண்டு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். இதையொட்டி கால்பந்து போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Four people have been killed and 12 others injured, four critically, after a mass shooting in the US state of Mississippi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.