2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.13) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்கள் மூவருக்கும் வழங்ப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலமாக நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான நிபந்தனைகளை அடையாளப்படுத்தியதற்காக ஜோயலுக்கும்
பழைய கொள்கைகளை நீக்கி புதிய கொள்கைகள் மூலமாக நீடித்த வளர்ச்சி என்ற ஆய்வுக்காக மற்ற இருவருக்கும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 1896-இல் மறைந்த ஸ்வீடனின் பெரும் பணக்காரரும் டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் நோபல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிக்க | இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.